நீலகிரியில் மற்றொரு சிறுத்தையுடன் சண்டையிட்டு உயிரிழந்த சிறுத்தை..!
கூடலூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை மற்றொரு சிறுத்தையுடன் சண்டையிட்டு உயிரிழந்தது ஆய்வில் தெரிய வந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிறுத்தை ஒன்று நடமாடியது.
இதனை கண்ட அந்த பகுதி மக்கள் வன துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சென்று பார்த்த பொழுது அந்த சிறுத்தை இறந்து கிடந்தது தெரிய வந்தது. சிறுத்தையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் ஆய்வு செய்த பொழுது மற்றொரு சிறுத்தையுடன் சண்டையிட்டு காயங்கள் ஏற்பட்டதில் சிறுத்தை உயிரிழந்தது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து அந்த பகுதியில் மற்றொரு சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்று வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.





