தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு.. கேரளா அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து க்ரிஷ்மா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு கேரள அரசு பதில் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தை உலுக்கிய ஷெரண்ராஜ் கொலை வழக்கில் கிரீஸ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளைஞரும் க்ரிஷ்மா என்ற இளம்பெண்ணும் காதலில் உள்ள நிலையில் கசாயத்தில் விஷம் வைத்து தனது காதலனை கொன்றார். இந்த வழக்கில் கிரிஷ்மா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கிருஷ்மா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவிற்கு கேரளா அரசு பதில் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிரிஷ்மாவின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்குமாறு திருவனந்தபுரம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





