தீயாக பரவிய வைரல் போட்டோ..!
தமிழ்நாடு முதல்வர் விஜய், சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே தனது குடுத்பத்தை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மகன் தனது முதல் பட ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருந்து வரும் நிலையில், தற்போது அவர் தனது அப்பா விஜய்யை சந்தித்தது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படஙகளை கொடுத்துள்ளவர் விஜய். கடந்த 2024-ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய அவர், 2026 சட்டசபை தேர்தலில் தனி பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை பிடித்து முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவில் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், அம்மா ஷோபா சந்திரசேகர் ஆகியோர் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.
கடந்த 1999-ம் ஆண்டு சங்கீதா சொர்ணலிங்கம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட விஜய்க்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதனிடையே தேர்தலுக்கு முன்பாக விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு, சென்னை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இருமுறை நடந்நத நிலையில், விஜய் சங்கீதா இருவருமே விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விஜயின் மகள் வெளிநாட்டில் படித்து வரும் நிலையில், மகன் ஜோசன் சஞ்சய், லைகா தயாரிப்பில் சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். சந்தீப் கிஷான் நாயகனாக நடித்துள்ள இந்த படம் வரும் ஜூலை மாதம் வெளியாக உள்ளது. அப்பா விஜய் முதல்வர் ஆனாலும், பிள்ளைகள் மற்றும் மனைவி சங்கீதா என யாருமே அவரை இதுவரை சந்தித்தாக எந்த ஒரு புகைப்படமும் வெளியாகாத நிலையில், தற்போது விஜய் தனது மகன் ஜோசன் சஞ்சய்யை சந்திததது போன்று ஏ.ஐ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை உண்மை என்று நம்பி பலரும் தங்கள் வாழ்த்துக்களையும் பாசிட்டீவான கருத்துக்களையும் கூறி வரும் நிலையில், ஒருசிலர் இது உண்மையாக இருந்தால் சந்தோஷம் தான் என்று பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜோசன் சஞ்சய் பெயரில் போலியான கணக்கில் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டுளள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.





