--- --:--:-- --

விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க காவல்துறையினர் அமைத்துள்ள தடுப்புகள்..!

4

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அவர்களை தடுப்பதற்காக காவல்துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் மாநில எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நீடிக்கிறது.

 

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டங்களை கைவிடுவது என அவர்கள் உறுதியாக உள்ளனர். அடுத்தடுத்து விவசாயிகளை தடுக்க மாநில எல்லைகளில் காவல்துறையினர் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

 

கம்பிகள் பொருத்தப்பட்ட இரும்பு தடுப்புகளை பல்வேறு அடுக்குகளாக சாலையின் குறுக்கே அவர்கள் அமைத்துள்ளனர். சிமெண்ட்டுகளால் செய்யப்பட்ட தடுப்புகளையும் போட்டு காவல்துறையினர் சாலைகளை மறித்து உள்ளனர்.

 

விவசாயிகள் வாகனத்தில் செல்வதை தடுக்கும் நடவடிக்கையாக சில பகுதிகளில் சாலைகளில் கூரிய இரும்பு கம்பிகளை பிடித்து வைத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon