சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை இன்றுடன் ஓய்வு..!
ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை இன்று மாலை வரை ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 58 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை ஒட்டி பாஜக காங்கிரஸ் கட்சியினர் தீவிர பரப்பறையில் ஈடுபட்டு வந்தனர்.
பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆளும் பாஜக சார்பில் பரப்புரை மேற்கொண்டனர். காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் பரப்புரை மேற்கொண்டனர்.
இரு வாரங்களாக அனல் பறக்க நடந்து வந்த பரப்புரை இன்றுடன் ஓய்வடைகிறது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.





