வீட்டிற்குள் புகுந்த ஆறடி நீள பாம்பு..!
ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை ராஜாஜி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது வீட்டிற்குள் ஆறடி நீளம் உள்ள நாகப்பாம்பு இருப்பதை கண்டவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து பாஸ்கரன் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.





