லாரன்ஸ், பிரியாபவானி சங்கர், சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்..!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படத்தில் நடிக்க நடிகர் சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா படங்களை தயாரித்த கதிரேசன் தற்போது ருத்ரன் என்ற படத்தை இயக்குகிறார்.
லாரன்ஸ், ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான அறிவிப்பை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படத்தின் முக்கிய நாயகர்களில் ஒருவராக இருந்த சரத் குமார் தற்போது திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறார். அந்த வரிசையில் ராகவாலாரன்ஸின் ருத்ரன் படத்தை தேர்வு செய்துள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே காஞ்சனா திரைப்படம் வெளியாகி வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.






