ஆபாச தளங்களுக்கு விரைவில் தடை… வருகிறது சட்டம்
இளைய சமுதாயத்தை கெடுக்கும் ஆபாச தளங்களுக்கு, அமெரிக்காவில் தடைவிதிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் ஆபாச வரையறை சட்ட மசோதாவை குடியரசுக் கட்சியின் செனட்டர் மைக் லீ தாக்கல் செய்துள்ளார்.
ஆபாச தளங்கள் அமெரிக்க சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும், போர்னோகிராபியை குற்றச்செயலாக அறிவிக்கவும், அதன்மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அம்மசோதா கோருகிறது.





