--- --:--:-- --

மறைந்த நடிகர் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..!

1

றைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். நடிகர் சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னை அடையாரில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

 

இதில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார்.

 

பெஞ்சமின் பாண்டியராஜன் ,தேனி ரவீந்திரன் ஆகியோரும் சிவாஜி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சிவாஜி குடும்பத்தினர் ஆன நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

 

Leave a Reply

Right Menu Icon