--- --:--:-- --

திட்டங்கள் எதையும் ராகுல் சொல்லவில்லை – குஸ்தி எடுப்பது அழகல்ல: குஷ்பு விளாசல்

kushboo 02

என்ன திட்டம் கொண்டு வருவோம் என்று ராகுல் சொல்லாமல், குஸ்தி எடுத்துக் கொண்டிருப்பது ராகுல் காந்திக்கு அழகல்ல என்று பாஜகவை சேர்ந்த குஷ்பு, காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

 

தேர்தல் காலங்களில் பிரசார மேடைகளில் சூடுபறக்கும்; ஆவேசப் பேச்சுகளும் அனல் பறக்கும் வாத பிரதிவாதங்களும் நடக்கும். தமிழகத்தில் திராவிட கட்சிகள் மட்டுமின்றி பாஜக தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்ட மேடைகளில் இந்த ஆவேசத்தை இம்முறை காண முடிகிறது.

 

ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிரசாரம் மாறுபட்டுள்ளது. எளிமையான தலைவர் என்று காட்டிக் கொள்ள முற்படுவதற்காக கடையில் அமர்ந்து டீ சாப்பிடுகிறார். மீனவர்களுடன் கடலில் குளித்தார்; தூத்துகுடியில் உப்பளத்தில் உப்பு சேகரித்தார்.

 

அதேபோல் கன்னியாகுமரியில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என கும்மாளமிட்டார். தேர்தல் பிரசார மேடைபோலவே தெரியவில்லை. கூத்தும் கும்மாளமுமாக இருந்தது. அதே பள்ளியில், மாணவி ஒருவருடன் போட்டிப்போட்டு ராகுல் தண்டால் எடுத்துக்காட்டினார்.

 

இதை பலரும் ரசித்தாலும் காங்கிரஸ்காரர்கள் பலருக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. தேர்தல் பிரசாரம் செய்ய வந்த வேலையை விட்டுவிட்டு, இப்படியா கண்கட்டி வித்தை காட்டுவது? தேர்தலுக்கு ஒருமாதமே உள்ளதை அறியாமல் இப்படி குழந்தைத்தனமாக இருக்கிறாரே என்று கதர்ச்சட்டைக்காரர்கள் சிலர் வேதனையோடு குறிப்பிட்டனர்.

 

இந்நிலையில், பாஜகவை சேர்ந்த குஷ்புவும் ராகுல் காந்தியின் தேர்தல் பிரசார ஸ்டைல்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கடலில் குளிப்பது , குஸ்தி எடுப்பது நல்ல தலைவருக்கு அழகல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

 

பிரசார மேடைகளில், என்ன திட்டத்தை கொண்டு வருவோம் என மக்களிடம் அவர் சொல்ல வேண்டும் என்ற குஷ்பு, நிதி ஆண்டின் தொடக்கம் மற்றும் இறுதியில் எரிபொருள் உயர்வது இயல்பு என்றும் விளக்கம் அளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon