--- --:--:-- --

கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு..!

6

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை 12 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். ஒடிசாவை சேர்ந்த அர்ஜூன் – கமலினி தம்பதி திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

 

கர்ப்பிணியாக இருந்த கமலினிக்கு கடந்த 22ஆம் தேதி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. கமலினி சிகிச்சை பெற்று வந்த போது வேறொரு பெண்ணுக்கு உதவிக்காக இருந்த உமா என்ற பெண் கமலினிக்கு உதவி செய்வது போல நடித்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்க செவிலியர்கள் குழந்தையை கேட்டதாக கூறி வாங்கிச் சென்று குழந்தையை பையில் வைத்து கடத்தி சென்று விட்டார். உமாவின் செல்போனின் சிக்னலை வைத்து அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருவரது வீட்டில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon