இரும்பு கம்பியை விற்று மது அருந்திய இரு நபர்கள் போலீசில் ஒப்படைப்பு..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இரும்பு கம்பிகளை திருடி மது அருந்திய இரண்டு பேரை பொதுமக்கள் தர்மடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
வேடசந்தூர் கடை வீதியில் இயங்கி வரும் இரும்பு கடையின் பின்பகுதியில் உள்ள குடோனில் இருந்து இரும்பு கம்பிகளை இரண்டு பேர் திருடி செல்வதாக அதன் உரிமையாளருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்களை தேடி சென்ற உரிமையாளர் அங்கிருந்து மதுபான கடைக்குள் மது அருந்திக் கொண்டிருப்பதை கண்டு கையும் களவுமாக பிடித்து விசாரித்தார்.
ஆனால் அவர்கள் உண்மையை சொல்ல மறுத்ததால் அங்கிருந்தவர்கள் தர்மடி கொடுத்தபொழுது தாங்கள் இரும்பு கம்பியை திருடி அதில் கிடைத்த பணத்தில் மது அருந்தியதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் மது போதையில் இருந்து அவர்கள் இருவரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.





