கர்நாடகாவில் பாஜகவுக்கு காங்கிரஸ் வைத்த செக்..!
கர்நாடகாவில் அடுத்த மாதம் பத்தாம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து தரப்பு மக்களின் வாக்குகளையும் பெறுவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இட ஒதுக்கீடு வரம்பை 50 சதவீதத்திலிருந்து 75% ஆக உயர்த்தவும் மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.





