--- --:--:-- --

கப்பலூர் சுங்கச்சாவடி போராட்டம்..தற்காலிகமாக ஒத்திவைப்பு..!

2

ப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிராக 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக திரும்ப பெறப்பட்டது. மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கடந்த சில வாரங்களாக விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் புதிய உள்ளூர் வாகன கட்டணம் அமலுக்கு வருவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்தது.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம் கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கும் எதிராக நீடித்தது. திருமங்கலம் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில் காவல்துறையினர் கைது செய்ய முற்பட்ட பொழுது பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

இதனையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் சுங்கச்சாவடி நிர்வாக அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.

 

இறுதியாக காவல்துறையினர் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தியதில் வரும் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

 

Right Menu Icon