பள்ளி சிறுவர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்தியதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்..!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளி வளாகத் தூய்மை பணியில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்திய சம்பவம் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனுப்பன்குளம் ஊராட்சி ஒன்றிய தொட்பட்ட நீலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கல்வி பயிலும் மாணவ, மாணவிகளை பள்ளி வளாக தூய்மை பணியில் ஈடுபட வைத்துள்ளது.
சம்பந்தப்பட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், இதனை தடுத்து நிறுத்தி இது போன்ற தூய்மை பணிகளுக்கு தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






