சீதையாக நடிக்க கரீனா கபூருக்கு கடும் எதிர்ப்பு..!
சீதையாக நடிக்க கரீனா கபூருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ராமாயண கதையை தழுவி 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் படத்தில் ராமராக மகேஷ்பாபு, ராவணனாக ரித்திக் ரோஷன் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் சீதையாக நடிக்க 12 கோடிக்கு கரீனா கபூரை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. டுவிட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாலிவுட் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
சீதையாக நடிக்க எந்த விதத்திலும் கரீனாகபூர் தகுதியானவர் அல்ல என்றும் இந்து கடவுளை மதிக்காதவர் என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்துகொண்டு இஸ்லாமியராக மாறி விட்ட கரீன கபூர் கடவுளான சீதையாக நீங்கள் நடிக்க வேண்டாம் என மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.







