திமுக சார்பில் மாநிலங்களவை செல்கிறார் கமல்ஹாசன்..!
தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19-ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், திமுக சார்பில் தேர்வாகவுள்ள 4 பேரில் ஒருவராக நடிகரும் மநீம தலைவருமான கமல் இருப்பார் என அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கடந்த மக்களவை தேர்தலில் திமுகவுடன் மநீம கூட்டணி அமைத்தது. ஆனால், தொகுதி ஒதுக்கப்படவில்லை. அப்போதே மநீமவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கி இருப்பதாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.






