ஊதிய உயர்வு.. பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை மே 29-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் 2023 ஆகஸ்டுடன் நிறைவடைந்தது.
15-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.






