புதிய அதிபராக ஜோ பைடன் அதிகாரபூர்வமாக அறிவிப்பு..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை நாடாளுமன்றம் உறுதி செய்து சான்றிதழ் வழங்கிய நிலையில் அதிகார மாற்றத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்காவில் நடந்து முடிந்த தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோபைடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஏற்க மறுத்து வருகிறார்.
முறைகேடுகள் செய்து தேர்தலில் வெற்றி பெற்றதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் தேர்தல் முடிவுகளை எதிர்த்து பல்வேறு நீதிமன்றங்களில் தொடர்ந்த 60க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி ஆனது. வரும் 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோபைடன் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதிகாரப்பூர்வமாக அவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கும் பணிகள் நடைபெற்றன. இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆயுதம் தாங்கிய டிரம்ப் ஆதரவாளர்கள் திடீரென அத்துமீறி நுழைந்துள்ளனர்.
அவர்களை ஒடுக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில்தொடர்ந்து நடந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் நாடாளுமன்றம் மீண்டும் கூடி அதிபர் தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அதற்கான சான்றிதழை வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோபைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்த நாடாளுமன்றம் சான்றிதழ் வழங்கியது. அதேசமயம் இந்த தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக மீண்டும் அவர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.







