ஜனநாயகன் பட வழக்கு – விசாரணைக்கு எடுப்பதில் தாமதம்
ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்று வழங்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மேல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
தலைமை நீதிபதி அமர்வு தற்போது வேறு வழக்கை விசாரித்து வருவதால் ஜனநாயகன் படம் தொடர்பாக மேல்முறையீட்டின் மீதான விசாரணை தொடங்க இன்னும் சிறிது நேரம் எடுக்கும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.






