வைகை ஆற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை 2 மணி நேரம் போராடி மீட்பு..
மதுரை வைகை ஆற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளையை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அந்த கரையில் கட்டி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை ஒன்று ஆற்றில் தவறி விழுந்துள்ளது. ஆகாயத்தாமரைகள் மிகுந்த இடத்தில் சிக்கிய காளையை தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.






