தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. வங்க கடலில் உருவான புயல் இலங்கையில் திருகோணமலையில் வடக்கு பகுதியில் கரையை கடந்தது.
இதைதொடர்ந்து புயல் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து அதே இடத்தில் நீடித்தது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும் தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திருச்சி, புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






