--- --:--:-- --

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு..!

5

மெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை நேற்று சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் பேசியதாக தெரிகிறது.

 

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25% வரி விதித்து இந்தியா மீதான மொத்த இறக்குமதி வரியை 50% ஆக அமெரிக்கா உயர்த்திய பின்னர் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

Right Menu Icon