பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்..!
காலமான பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அரை நூற்றாண்டுகளாக இசைத்துறையில் அபரிதமான சாதனை புரிந்த எஸ்பிபிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு இந்த விருதினை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இசை துறையை சேர்ந்த லதா மங்கேஷ்கர், கோபன் ஹஜாரிக, எம்எஸ் சுப்புலட்சுமி, பிஸ்மில்லா கான் ,பீம்சென் ஜோஷி ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கி இருப்பதையும் அந்த கடிதத்தில் ஜெகன்மோகன் ரெட்டி நினைவு படுத்தியுள்ளார்.







