--- --:--:-- --

உப்பூர் அனல் மின் நிலையம் அருகில் விபத்து வாலிபர்கள் பலி..!

5.2

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல் மின் நிலையம் அருகே நாகனேந்தல் பகுதியில் 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது இதில் சம்பவ இடத்தில் 3 பேர் பலியாகினர்.

 

மேலும் 2 பேர் படு காயங்களுடன் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். கருங்குடி காளீஸ்வரன் மகன் டிரைவர் பாண்டித்துரை 32 சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது.இவருடன் டூவீலரில் சென்ற அத்தானூர் கிராமத்தை சேர்ந்த கார்மேகம் மகன் உதயக்குமார் 37 படுகாயமடைந்தார்.

 

மற்றொரு இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரில் தேவகோட்டை கைலாசபுரம் தாமரைக்கனி மகன் ஹரிகரன் 19, செந்தில் குமார் மகன் வல்லரசு 19 ஆகியோர் உயிரிழந்தனர். சென்னையைச் சேர்ந்த ஆதி நாராயணன் மகன் 19 கௌதம் படுகாயமடைந்தார்.

 

காயமடைந்த உதயக்குமார், கௌதம் ஆகியோர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில். கௌதம் உயிர் பிரிந்தது. மேலும் இச்சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருப்பாலைக்குடி காவல்நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon