கொரொனா வைரஸை தாக்கி அழிக்கும் ஐவர் மெக்டின் !
ஐவர் மெக்டின் எனப்படும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து கொரொனா வைரஸை எதிர்க்கக்கூடியது என மருத்துவ ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஆன்டிவைரஸ் ரிசர்ச் எனப்படும் இதழில் வெளியான அந்த ஆய்வறிக்கையில் ஐவர் மெக்டின் மருந்து செல் வளர்ப்பு முறையில் பல்கிப்பெருகி 48 மணி நேரத்தில் வைரசை அழித்து விடும் என குறிப்பிட்டுள்ளது. இந்த மருந்தை ஒரு முறை செலுத்தினாலே 24 மணிநேரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இன்ஃப்ளூயன்சா, எச்ஐவி, டெங்கு, சிகா ஆகிய வைரஸ்களுக்கு எதிராகவும் இது சிறப்பாக செயல்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. எனினும் இதை பயன்படுத்தும் முன்பு மருத்துவமனைகளில் முறையாக சோதனை செய்து பார்க்க வேண்டும் என இந்த ஆராய்ச்சி கட்டுரையை எழுதிய ஆஸ்திரேலிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.






