வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்தது கண்டுபிடிப்பு..!
திருப்பூரில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரையை விற்பனை செய்த தந்தை மகன் உள்ளிட்ட 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சமீப காலமாக வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அதன்படி திருப்பூர் காலேஜ் ரோடு, மாஸ்கோ நகர், காரைக்குடி அருகே மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய காவல் துறை மருந்தக உரிமையாளர் மயில்சாமி, அவரது மகன் சதீஷ்குமார், முகமது இக்பால், சூரிய நாராயணன், சூரிய பிரகாஷ் மற்றும் சிவகுமார் ஆகியோரை கைது செய்தது.
மேலும் 120 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் கடலூரில் இருந்து விற்பனைக்கு மாத்திரையை கொண்டு வந்த வேல்முருகன் என்பவரை கைது செய்து 110 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.





