இது திமுக அரசு விடைபெற வேண்டிய நேரம்: பியூஷ் கோயல்
இந்தத் தேர்தல் ஒரு மாற்றத்திற்கான தேர்தலாகும்; தமிழகம் ஒரு மாற்றத்தை விரும்புகிறது என மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்கள் உதயநிதியை ஒருபோதும் முதல்வராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தமிழ் கலாசாரத்தையும், தமிழ் பெண்களையும் மதிக்காத ஒருவரை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உதயநிதியின் கருத்துக்களால் தமிழக மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன. இந்த திமுக அரசு விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.





