இஸ்லாமிய பாடசாலை கதவு உடைப்பு..விலை உயர்ந்த லேப்டாப்பை திருடிய நபர்கள்..!
கோவில்கள் இஸ்லாமிய பாடசாலையின் கதவை உடைத்து விலை உயர்ந்த லேப்டாப்பை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் மேற்கு பாளையத்தை அடுத்த காரைமடை நகரில் இஸ்லாமிய பாடசாலை இயங்கி வருகிறது.
கடந்த ஒன்பதாம் தேதி பாடசாலையில் உடைக்கப்பட்டு அங்கிருந்த லேப்டாப் திருடப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது திருட்டில் ஈடுபட்டது மணிகண்டன் மற்றும் கார்த்திக் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் லேப்டாப்புகளை பறிமுதல் செய்தனர்.





