இந்தியாவில் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வர தடையா..?
டெல்லி ஜே.எம்.யூ பல்கலைக்கழக மாணவிகள் வகுப்புகளுக்கு ஹிஜாப் அணிந்து வர தடை இல்லை என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் சாந்தி ஸ்ரீ தெரிவித்துள்ளார். எந்த ஆடை அணிய வேண்டும் என்பது மாணவிகளின் சுதந்திரம் சம்பந்தப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி நிலையங்கள், ஆடை கட்டுப்பாடு விதிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளார். உணவு உடை ஆகியவை ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் என்றும் கல்வி நிறுவனங்கள் உணவு உடைப்பற்றி விதிகள் வகுக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய தேசிய மொழி குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் ஒரே மொழி ஒரே மதம் முறை எனும் கோட்பாட்டை தான் எதிர்ப்பதாக கூறினார்.





