வன்முறையாளர்கள் கையில் தலைநகர் டெல்லி இருக்கிறதா…?
டெல்லியில் நிகழ்ந்து வரும் வன்முறைகள் அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்ற சந்தேகத்தை எழுப்பி இருப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிஏஏ, என்பிஆர், என் ஆர் சி ஆகியவற்றுக்கு எதிராக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சென்னையில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட்டது.
ராயப் பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி, ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மலை சத்தியா, வன்னியரசு, ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்றனர். மாநாட்டில் உரையாற்றிய முகஸ்டாலின் டெல்லியிலுள்ள வன்முறைகள் அச்சமூட்டும் வகையில் இருப்பதாகவும் வன்முறையாளர்கள் கையில் டெல்லி இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புவதாக கூறினார்.






