போலி இணையதளம் தொடங்கி ஐபிஎல் டிக்கெட் மோசடி..!
ஐபிஎல் டிக்கெட் விற்பதற்காக போலி இணையதளம் உருவாக்கி ரசிகர்களிடம் லட்சக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சைபர் கிரைம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சென்னை, ஐதராபாத் ஆகிய இரு இடங்களில் நடந்த லீக் போட்டிகளை வீரர்கள் அருகே இருந்து பார்க்கலாம் என்றும் தள்ளுபடி விலையிலான டிக்கெட் என்றும் விளம்பரப்படுத்தி இந்த இணைய மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.





