IPL நிறைவு நிகழ்ச்சி: முப்படைகளுக்கு அழைப்பு
IPL நிறைவு நிகழ்ச்சியின்போது ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கான சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு முப்படைகளின் உயரதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நமது ராணுவ வீரர்களின் வீரத்தை போற்றும் வகையில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். IPL நிறைவு நிகழ்ச்சி அகமதாபாத்தில் வரும் ஜூன் 3-ம் தேதி நடக்கிறது.






