டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தகுதி பெற்றவர்களுக்கு இன்று முதல் நேர்முகத் தேர்வு..!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்து பிரிவில் தகுதி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு இன்று தொடங்குகிறது. சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் இன்று தொடங்கி வரும் 17ஆம் தேதி வரை நேர்முக தேர்வு நடைபெற உள்ளது.
இதில் தகுதி பெறும் தேர்வர்களுக்கு பணி நியமனத்திற்கான கலந்தாய்வு வரும் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சார்பதிவாளர் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பதிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதில் நேர்முக தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வு மூலமாக 121 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒரு காலி பணியிடத்திற்கு மூன்று பேர் விதமாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.





