பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை..!
பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரொனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சூழலில் எஸ்பிபியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள எஸ்பிபிக்கு எக்மோ மற்றும் உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எஸ்பிபியின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தற்போதைய முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் திருப்தியாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.







