--- --:--:-- --

மாநகராட்சி பள்ளியில் இந்தி பாடமா?? இல்லவே இல்லை என மறுத்த மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண் குமார் ஜடாவத் !!!

8.1

ரசு பள்ளி சேர்க்கை விண்ணப்பங்களில் ஹிந்தி படிக்க ஆவலா என்ற கேள்வி தற்போது கோவையில் பரபரப்பாக பேசி வருகின்ற நிலையில் இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் விளக்கமளித்துள்ளார்.

 

கோவை மாநகராட்சி பள்ளி வழங்கிய மாணவர் சேர்க்கை படிவத்தில் மூன்றாவது மொழியாக இந்தி கற்க விருப்பமா அல்லது கைத்தொழில் கற்க விருப்பமா என்று குறிப்பிட்டுள்ளதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண் குமார் ஜடாவத் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

 

அவர் கூறுகையில் தமிழகத்தில் இரு மொழிகொள்கை திட்டம் தான் நடைமுறையில் உள்ளது. இதுபோன்ற தவறான கருத்துக்களை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.மேலும்,அரசு பள்ளிகளில் இந்தி மொழி ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. பள்ளியில் அவ்வாறு தவறான படிவம் வழங்கியிருந்தால் பள்ளியில் இதுகுறித்து விசாரித்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும்,ஊடகங்கள் வாயிலாக தவறான கருத்துக்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதில் உண்மை இருந்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

அதனை தொடர்ந்து கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேட்டியளித்தார். கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும்,நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக கோவை இ.எஸ்,ஐ. மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, கோவை கொடிசியா போன்ற இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

மேலும், நோய் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள். பயப்பட தேவையில்லை உடனடியாக மருத்துவர்களை அனுகி சிகிச்சைகள் மேற்கொண்டால் விரைவில் குணமடையலாம். தற்பொழுது நவீன “பல்ஸ் ஆக்ஸன் மீட்டர்” என்ற நோய் கண்டறியும் எந்திரம் வந்துள்ளது. இதை பயன்படுத்தி முன்கூட்டியே மக்கள் தெரிந்துகொண்டு நோய்யை குணப்படுத்தவும், நோய் பரவலை தடுக்கவும் முடியும், மேலும் மாநகராட்சி சார்பாக கோவை மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்களை கோவை மாநகராட்சி நடத்திவருகிறது. மக்கள் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தவேண்டும். என தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon