கோவையில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 16 பேர் பலி.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பால் மக்கள் அதிர்ச்சி !!!
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி தமிழகம் முழுவதும் 31/2 லட்சத்திற்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதே நேரம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியிருப்பது மக்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா தொற்றில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த நிலையில் கோவையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.கொரோனா தொற்றால் இதுவரை 10,158 பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 7221 பேர்.217 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 300 ஐ தாண்டி வருகிறது.

இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் கோவையில் 16 பேர் உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.







