--- --:--:-- --

சொன்ன நேரத்தில் வராத insta கள்ள காதலன்..பெண் செய்த விபரீதம்..!

10

instagram காதலனை சந்திக்க வந்த பெண் கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனை சேர்த்து குடிப்பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண் திருமணம் முடித்து கணவருடன் எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார்.

 

இந்த நிலையில் இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் கட்டப்பனை பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் காதல் ஆக மாறி உள்ளது. இந்நிலையில் அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் காதலனை நேரில் சந்திக்க அவரை கட்டப்பனை சேவிங் சான்ஸ் மருத்துவமனை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வரச் சொல்லியுள்ளார்.

 

தனது காதலனை பார்க்கும் ஆசையில் வந்த பெண் அவர் கூறிய நேரம் கடந்தும் காதலன் வராததால் மனம் உடைந்து தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த பயணிகளும் அருகில் அடைந்த கடைக்காரர்களும் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த அறிந்த அந்த பெண்ணின் கணவர் சம்பவ இடத்திற்கு வந்தார் இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

Right Menu Icon