நீர் பாதுகாப்பை வலியுறுத்தி கார் பந்தயம் நடத்த ஐ.என்.ஆர்.சி திட்டம்
சாம்பியன்ஸ் குழுமத்தால் ஊக்குவிக்கப்படும் இன்டியன் நேஷனல் ரேலி ஷேம்பியன் ஷிப் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.ஆறு குளங்களை தூர்வார வேண்டும், நீர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நீர் பாதுகாப்பை வலியுறுத்தி கார் பந்தயம் நடத்த ஐ.என்.ஆர்.சி திட்டமிட்டுள்ளது. அதன்படி எம்.ஆர்.எப் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் ஒருங்கினைந்து பல்லடம் அருகே உள்ள கேத்தனூரில் இப்பந்தயத்தை நடத்த உள்ளன.இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சாம்பியன்ஸ் யாச் க்ளப்பின் தலைமை அதிகாரி கெளதம் சாந்தப்பா 6 சுற்றுகளாக இப்போட்டி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.அதன்படி முதல் சுற்று சென்னையிலும், இரண்டாம் சுற்று கோவையிலும், மூன்றாம் சுற்று ராஜஸ்தானிலும், நான்காம் சுற்று கொச்சியிலும் நடைபெறுவதாக கூறினார்.மேலும், ஐந்து , ஆறாவது சுற்றுகள் பெங்களூர் மற்றும் சிக்மகலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று கூறினார்.
இப்போட்டியில் 125 கிலோ மீட்டர் பந்தய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இச்செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று பேசிய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை சிவானி ப்ருத்வி, இதுபோன்ற போட்டிகள் பெண் வலிமையை நிரூபிக்கும் களமாக அமைந்துள்ளதாக கூறினார்.





