--- --:--:-- --

இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையினர் சென்ற பேருந்து விபத்து..!

10

த்தரகாண்ட் மாநிலத்தில் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் சென்ற பேருந்து விபத்திற்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக போலீசார் உயிர் தப்பினார். இந்தோ- திபெத்திய எல்லை காவல் படையை சேர்ந்த போலீஸ்காரர்கள் உத்தரகாண்ட் மாநிலம் மிசோரி அருகே பேருந்தில் சென்றனர்.

 

குறுகிய வளைவுகள் கொண்ட சாலையில் சென்றபோது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக சென்ற பேருந்து வளைவில் உள்ள கட்டடத்தின் மீது மோதி நின்றது.கெம்டி நீர்வீழ்ச்சி அருகே இந்த விபத்து நேரிட்டது.

 

பேருந்தின் முன் பகுதி அந்தரத்தில் தொங்கியபடி இருந்தது. உள்ளே இருந்த வீரர்கள் லாவகமாக கீழே இறங்கினர். பேருந்து கொஞ்சம் அதிக வேகத்தில் வந்திருந்தால் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து உயிர் பலி ஏற்பட்டு இருக்கும்.

Leave a Reply

Right Menu Icon