வலிமையான கட்டமைப்பில் இந்திய வங்கிகள் : பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி 70,000 பேரை அரசு பணியில் நியமிப்பதற்கான ஆணைகளை வழங்கினார். உலகின் வலிமையான கட்டமைப்பை கொண்ட வங்கிகளாக இந்திய வங்கிகள் உருவெடுத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புரோஸ்கர் மேலா திட்டத்தின் கீழ் 70 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு பணிக்கான பணி நியமன ஆணையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி முந்தைய ஆட்சியில் போன் பேங்கிங்கில் நடந்த ஊழல் நாட்டின் வங்கி கட்டமைப்பை நொறுக்கி விட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர் 2014 ஆம் ஆண்டு தங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வங்கிகளை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் அதன் விளைவாக உலகின் மிக வலிமையான கட்டமைப்பை கொண்ட வங்கிகளாக இந்திய வங்கிகள் தற்பொழுது உருவெடுத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.






