இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்..!
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல் இரவு ஆட்டமாக புனேவில் இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
டெஸ்ட் தொடரை 3 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றிய அணி டி20 தொடரையும் 3 க்கு 2 என வென்றது. இந்நிலையில் இரு அணிகள் இடையான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் இன்று தொடங்குகிறது.
அதன்படி இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. தொற்று காரணமாக போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இரு அணிகளும் இதுவரை 100 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 53 போட்டிகளில் இந்தியாவும், 42 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இரண்டு போட்டிகள் சமனிலும் மூன்று போட்டிகள் முடிவு இல்லாமலும் உள்ளன.






