தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரொனா..!
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்து 400 ஐ நெருங்கியது. குறிப்பாக சென்னையில் 496 பேர் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் மீண்டும் படிப்படியாக பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மாநிலம் முழுவதும் ஒரே நாளில் ஆயிரத்து 385 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
குறிப்பாக சென்னையில் 496 பேருக்கும், கோவையில் 130 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 126 பேருக்கும் கண்டறியப்பட்டது. இதுவரை மொத்தமாக எட்டு லட்சத்து 68 ஆயிரத்து 367 பேர் பாதிக்கப்பட்டனர் .இவர்களில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 139 தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். 12,609 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பத்து பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒருநாள் பாதிப்பு ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் நிலையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 659 ஆக உள்ளது தற்போதைக்கு 8610 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






