இந்தியா – அமெரிக்கா இன்று முக்கிய பேச்சு வார்த்தை..!
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அமைச்சர் பியூஸ் கோயல் நாட்டு வர்த்தக அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேச உள்ளார்.
குறிப்பாக அமெரிக்கா பொருட்களுக்கு இந்தியா வரி குறைக்காவிட்டால் பதிலுக்கு தாங்களும் அதே அளவிற்கு வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் கூறியுள்ள நிலையில் அதில் சமரசம் செய்து கொள்வது குறித்து பேசப்படும் என தெரிகிறது.
பிரதமர் மோடி அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த பொழுது இருதரப்பு வர்த்தகத்தை 5 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர்களாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் மத்திய வர்த்தக அமைச்சரின் அமெரிக்க பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.






