இந்தியாவின் பல பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பம்!
இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக வெப்பம் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விதர்பா மரத்வாடா பகுதிகளிலும் மத்திய பிரதேசம் மேற்குபகுதி, ஹரியானா, டெல்லி, சண்டிகர், உத்திரப்பிரதேசம் தெற்கு பகுதி ஆகியவற்றில் 40 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக தட்பவெப்பநிலை பதிவாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், அருணாசலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டெல்லியில் உள்ள சில இடங்கள் ஆகியவற்றில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி அளவு அதிகமாகவும் ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கத்தின் கங்கை, டெல்டா பகுதி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி அதிகமாக பதிவாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.







