--- --:--:-- --

சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை..!

3

சென்னையில் மருந்து தயாரிப்பு நிறுவனம் உட்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து மெடிக்கல் நிறுவனத்திற்கு சொந்தமான மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஸ்டீல் நிறுவனத்தை காலை 7 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

மாதவரம், குன்றத்தூர், மாதவரம், மண்ணடி, சவுகார்பேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு மருந்து தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி துறை அலுவலகக் கிடங்குகளை காவல்துறையினர் பாதுகாப்புடன் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

சென்னை எழும்பூரில் உள்ள அண்ணாமலை வளாகத்திலும் சவுகார்பேட்டையில் உள்ள காம்ப்ளக்ஸ் மாதவரத்தில் உள்ள கிடங்கில் சென்னை பார்ட் டவுனில் உள்ள அலுவலகத்திலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

 

இதே போல வேப்பேரியில் உள்ள எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், குளோபல் மருத்துவம் உள்ளிட்ட இடங்களிலும் வருமானம் வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Right Menu Icon