ஒரே நேரத்தில் ஒரு பெண்ணுக்கு 3 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம்..!
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் ஒரு பெண்ணுக்கு சில நிமிடங்களில் 3 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தானே மாநகராட்சி ஊழியர் ஒருவரின் மனைவி ஆனந்த் நகரில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட சென்றபோது அவருக்கு சில நிமிடங்களில் மூன்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.






