நெருங்கிய நண்பனின் மனைவியுடன் தகாத உறவு..கொடூர செயல்..!
தர்மபுரி மாவட்டம் கும்மிடி அருகே நண்பனின் மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரின் நண்பர் நீதிமன்றத்தில் சரணடந்துள்ளார். கும்மிடி அருகே உள்ள ஜங்கால் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்.
திருமணம் ஆகாத இவர் தன் நெருங்கிய நண்பரான அறிவழகனின் மனைவியுடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அறிவழகன் மணிகண்டனை அடித்து கொலை செய்திருக்கிறான்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில் ஈரோட்டில் வைத்து மாயக்கண்ணனை கைது செய்திருந்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த அறிவழகன் அருள்நிதி நீதிமன்றத்தில் சரண் அடைந்திருக்கிறார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.





