--- --:--:-- --

திருவாடானையில் பெரிய  கோவில் வைகாசி விசாக திருவிழாவில் வெள்ளி வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் சுவாமி வீதி உலா..!

4.2

ராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானையில் அருள்மிகு சினேகவள்ளி தாயார் உடனாயே ஆதிரத்தினேஸ்வரர் ஆலய வைகாசி விசாத திருவிழா கடந்த மே 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடை பெற்று வருகிறது.

 

10 நாட்கள் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம் விழாவின் ஒவ்வோர் நாளும் சுவாமி  வீதி உலா நடைபெறும். இந்த வீதி உலாவில்  இன்று பஞ்ச மூர்த்திகளாக முதலில் விநாயகர் வெள்ளி மூஞ்சூறு வாகனத்திலும், முருகப்பெருமான் வள்ளிதெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்திலும், அதனை அடுத்து அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் சினேகவல்லி அம்பாள்  வெள்ளி ரிஷப வாகனத்திலும் அதனை தொடரிந்து சண்டிகேஸ்வரர் பல்லக்கு வாகனத்திலும்  வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வீதி உலாவில் தொடர்ந்து திருஞானசம்மந்தர் சிவபெருமானுக்கு திருமுறை பால் ஊட்டும் நிகழ்வு நடந்தது.

 

கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த கலையரங்கத்தில் ஆதி ஆதி நண்பர்கள் நடத்தியகலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் 22 1/2 நாட்டார்கள், ஆடானை நகர் வளர்ச்சி குழு, பொதுமக்கள் ஆதரவோடு கலை நிகழ்ச்சிகள், வானவேடிக்கைகள் நடைபெற்றது

Right Menu Icon