--- --:--:-- --

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 , 684 பேருக்கு கொரோனா தொற்று…87 பேர் உயிரிழப்பு

sfzs

மிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 684 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா பாதிப்புக்கு 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்தில் நாள்தோறும்கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிடப்பட்ட தகவலில் ஒரே நாளில் 5 ஆயிரத்து,684 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 74 ஆயிரத்து 940 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 83 ஆயிரத்து 266 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 6 ஆயிரத்து 599 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த தமிழகத்தில் இதுவரை குணமடைந்த அவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 16 ஆயிரத்து 715 ஆக உயர்ந்துள்ளது.

 

சென்னையை பொருத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 988 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,43,602 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,012 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon